பொட்டு வைத்த வட்டநிலா

பொட்டு வைத்த வட்டநிலா
அழைத்து பேசினாள்..!

மனபொட்டளத்தில்
பூட்டிவைத்த
புன்னகையை
கொஞ்சம் வீசினாள்...!

ஏக்கத்திலே
காத்திருந்தேன்
எண்ணி தினம் பூத்திருந்தேன்!
மூக்கியவள்
முத்துப்பேச்சாள்
முக்குளித்தேன்...!

அவள் பேச்சில்
ஏக்கத்தினை
தூக்கியெறிந்து
இன்பம் நிறைந்தேன்..!

கெண்டை விழி பார்க்கவில்லை
கை நகமும் சீண்டவில்லை
பெற்றெடுத்த சித்திரமே
பொட்டல் காட்டு முத்தாரமே

வெக்கமது மண்டிபோச்சி
வெண்ணிலவு கருத்துப்போச்சு
வானவில்லே வந்து போச்சி
குளிரின்றி நடுக்கமாச்சி

அனைத்திற்கும்
கொவ்வை இதழோர
சிரிப்பே சாட்சி....!

கொஞ்சி பேசும்
வண்ணக்கிளி
என்னை கொத்திபோவது
என்நாளோ...!

மாசியும் கடந்துப் போச்சி
கார்த்திகையோ வந்துபோச்சி
தையிலாவது மனம் திரடி
என் காதலுக்கு விடை சொல்லடி...!!!

வீடரமணி கி
வயலூர்

எழுதியவர் : வீரமணி. கி (18-Aug-20, 7:55 pm)
பார்வை : 474

மேலே