தவிப்புக்கள் தீரவில்லை

தவிப்புக்கள் தீரவில்லை..!
தவிரக்கவும் மனமில்லை..!
ஆண்டுகள் கடக்கின்றது..!
ஆழ்மனது துடிக்கின்றது..!

நடு இரவு குளிர் காலம்
நான் உரைத்தேன் காதல் கீதம்..!

நடுக்கிய சிரிப்பு சினுங்களில்
நயமாய் சொன்னாய்
" அய்யே மணி சொல்லிவிட்டாயே
டேய் போடா
ஏன்டா சொன்ன
என்னடா செய்வேன்" என்றாள்..!

கடந்தது இரண்டாடு
பதில் கேட்டால்
மௌனிக்கிறாள்..!

ஆண்டுக்கு இரண்டு
முறை பேசுகின்றாள்..!
அடிநெஞ்சில் நாற்காலியிட்டு அமருகின்றாள்..!

சொந்தகள் படைசூழ
எனை தவிர்கின்றாள்..!
இரவினிலே கண்ணீர்விட்டு
துயர் துடைக்கின்றாள்.!

பகிறியில்லை
பகிரலுமில்லை...!
முகநூலில் இல்லை
முகம் காட்டவும் இல்லை..!

முடிந்த வரை பொருக்கின்றேன்.!
உயிர் போகும் வரை உனக்காய்
காத்து கிடக்கின்றேன்...!

வீரமணி கி
வயலூர்

எழுதியவர் : வீரமணி. கி (18-Aug-20, 7:56 pm)
பார்வை : 636

மேலே