கந்தவேள் கடவுள்

கந்தவேள் கடவுள்
ஆசிரியப்பா
கந்தாநீ இளமுருகு தமிழினஅழகு
சொந்தப் பரமனின் இயற்கையின் மருஉரு
கந்தாக் கைலைப் பொய்கைத் திருவே
முக்கண்ணன் மகனே முன்னான்கு விழியார்
மூவிரண்டு சிரத்தான்ஆறிரண்டு கரத்தோன்.
ஈராறு செவித்தோ டுடன்ஆடும் குண்டலமாம்
மாதரார் குவிக்கரம் பணிவுடன் வணங்கும்
தாரகாசிங் கமுகப்பது மரைவதைத்த
பார்வதி சிவனார்ஸ்கந் தவேளைப் போற்றே


அம்மான் திருமால் பெண்மான் தேவயானி
பெம்மான் இந்திரன் வளர்த்தப் பொன்மானே
அசுரர் வென்ற மணியனின் பரிசாம்
அசுரரை வதைத்த முருகன் மயிலேறிப்
பறந்தான் புணர்ந்திடத் புனவனக் குறத்தியை
அம்மான் திருமால் மற்றோர் பெண்வள்ளி
அத்தான் மணியன் தேவானை மணக்க
அறுமுகன் சிறையெடுத்த வள்ளியாம்
அரகரா முருகாவென அறுமுகனைப் போற்றுவாய்

எழுதியவர் : பழனிராஜன் (18-Aug-20, 7:57 pm)
பார்வை : 173

மேலே