ஒற்றை எதிரி

ஒற்றை எதிரி
கொதிக்கும் குரிதி
எதற்காகவோ என்னிடம் பிறந்து
எவனயோ அழிக்க
என் மனப்போக்கை நீ கலைந்து
தன்னிலை குலைந்து
பொறுமையும் இழந்து
என்னுள் நீ வேருன்றி வளர்ந்து
என்னை விட்டு நான் வெகுதூரம் நகர்ந்து
காலப்போக்கில்
எதிர்த்தவனையும் மறந்து
அழுத்தமாய் எகுறிய இரத்தம்
மூளையில் ஏறிய பித்தம்
என்னை முடிக்க துடிக்கும்
உன் ஓங்கார சத்தம்
என் முன் கோபம்
ஏய்
உன்னை அழிக்கும்
என் நிசப்தம்
உன் ஒற்றை எதிரி
என் மௌனம்
என் மௌனம்
மௌனம் - கோபத்தின் ஒற்றை எதிரி.
கோபத்தின் ஒற்றை எதிரி

எழுதியவர் : காவேரி நாதன் (19-Aug-20, 6:36 pm)
சேர்த்தது : KAVERINATHAN
Tanglish : otrai ethiri
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே