ஆறு முதல் ஆறறை வரை

ஆறு முதல் ஆறறை வரை;-
அயர்ந்த உடல்- தரையில்
புதைந்த தலை - தலையனையில்
சிலிர்த்த மேனி - மிதமான குளிரில்
இழுத்த கைகள் - விலகிய போர்வையை
ஒன்றன் மேல் ஒன்றாய் - பின்னிய கால்கள்
இருக்கி சாத்திய - இமைகள்
கனவில் மிதந்து
நினைவையும் கலந்து
அனைத்தையும் கலைத்த
ஆறு மணி அலாரம்
சேவியுனில் நுழைந்து
மூளையை குடைந்து
அலறும் - ஒலி
சட்டென்று சீறி
பட்டென்று அனைத்த - விரல்கள்
விலகிய போர்வை வழியே
செவியால் பார்த்த நேரம்
சூரிய ஒளியோ ஜன்னலின் ஓரம்
ஊடுரும் வெளிச்சம்
மறுபடியும் அலறிய
நான் வைத்த அலாரம்

உபரி தூக்கம் போதுமென்று
கூவியது செவியோரம்
எழ மறுத்து திரும்பி அனைத்த
நன்பனாய் சோம்பல்
எதிரியான அலாரம்
கடைசி அலாரத்தையும்
அமர்த்திய விரல்கள்
முலித்திட்ட மூளை
மங்கலான பார்வை
தள்ளாடிய கால்கள்
அசைந்தாடி சென்று
கடந்த கனவையும்
நிகழ்ந்த நினைவயும்
மதியில் அசைப்போட்டுச் சென்ற
அறை மணி நேரம்
அதிகாலை
ஆறு முதல் ஆறறை வரை

எழுதியவர் : காவேரி நாதன் (19-Aug-20, 6:40 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 82

மேலே