ஒற்றைப் பார்வை

ஒற்றைப் பார்வை
~~~~~~~~~~~~~~~~~~~
காசு நகை ஆடம்பரம் இவற்றில் இல்லாத அமைதியும் அழகும் மண் வயல் மரம் இவைகளோடு ஒன்றிக்களிக்கும் மனதுக்குள் உறங்கமுடியாமல் குமைந்துகொண்டிருக்கும் காதலில் வாழ்கிறது...
************************************************************************
அவன்:
ஒற்றை பார்வை போதும்
ஒருசோடிக் கம்மல் போதும்
நெற்றிச் சுருக்கமதில்
நின்று வடியும் வியர்வை போதும்
பற்றுக் கொண்ட மனம்
பயந்து பயந்து கேட்பதெல்லாம்
உற்ற துணையாக
உரசியவள் உடன் நடக்க...

அவள்:
தாவணி நாணுடுத்தி
தலை வாரிப் பொட்டு வச்சேன்
சேவக் கறி சமைக்க
சமத்தாகப் படிச்சு வச்சேன்
ஆவணி நாள் பார்த்து
அத்தை மகன் வரவேண்டி
அவுக வீட்டு சாமிக்கு
அனுதினமும் பூசை வச்சேன்...


...மீ.மணிகண்டன்
https://youtu.be/y1diLWF7agE
#மணிமீ
Aug-17-2019

எழுதியவர் : மீ.மணிகண்டன் (20-Aug-20, 4:46 am)
Tanglish : otraip parvai
பார்வை : 522

மேலே