மெல்லத் திறந்தன

காதலில் வென்றால்
உலகின் கடைமுனை வரை
காதலர்களுக்கே....
தோல்வியில் புரண்டால்
காகிதக் கப்பலில்
காதலின் வாழ்க்கை....
உறங்காத கண்களும்
உழலுகின்ற உள்ளமும்
உந்துகின்ற வேகமும்
காதலை எட்டி விடும்
எட்டுகின்ற காதல்
தொட்டுவிடும் மனதை
பட்டதெல்லாம் மறந்து
பட்டாம்பூச்சிபோல்
பறந்து செல்ல
மனம் இரண்டும் இறக்கைகளாய் .
ஆகா என்னே/ இந்த காதல்
அழகின், அன்பின், இருப்பிடமாய்
காதலின் கதவுகள் மெல்ல திறந்தன

எழுதியவர் : பாத்திமாமலர் (23-Aug-20, 10:47 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 99

மேலே