வரம் தருவாய் விநாயகா
அனைத்துக்கும் முதல்வனே
ஆதிசக்தி புதல்வனே
ஆனை முகத்தானே
ஆறுமுகன் மூத்தவனே
வியாசருக்கு பாரதம் படைக்க
எழுத்தாணி தந்தவனே
கமண்டலத்தை சாய்த்து
காவிரியை மீட்டவனே
ஐங்கரன் உனக்கு
அருகம்புல் அர்ச்சனை
எலிமீது வரும் உனக்கு
எருக்கம் பூ மாலை
கொழுக்கட்டை படைத்து
கும்பிட்டு நிற்கின்றோம்
எழும் இன்னல்கள் தீர்த்து
வேண்டும் வரம் தந்திடுவாய்