திடிர் மழை
எதிர் பார்த்த ஒன்று
எதிர்பாராமல் இன்று
சாரல் கூட போது மென்றேன்
கொட்டி தீர்த்து குளிர வைத்து
மொட்டை தலையையும் நனைய வைத்து
கண்ணீர் விட நான் மறந்து
தண்ணீர் தெளித்த மலர் போல
மலர்ந்த கண்ணில் உனை காண
என்நேரமும் எதுவும் மாறும் என
எனக்கு உணர்த்திய திடிர் மழை