🍃மரங்களும் நானும்🚶
மனதோடு
மரங்கள் பேசட்டும்!
தலை அசைத்து
என் தனிமை எங்கும்
தென்றலாய் வீசட்டும்......
பறவையின் எச்சம்
எங்கும்!
விதைகளின் மிச்சமாய் நான்
இங்கும்!
என் முதுமை காலம்
முடிவில்லா தூரம்
அங்கே
ஒரு விதையாய் நானும்!
சுட்டெரிக்கும்
மணலெங்கும் என் வியர்வை பிரசவிக்கும்
ஒரு விதையின் பிறப்பை.........
ர ஸ்ரீராம் ரவிக்குமார்
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️