அழகை ஒப்பிட்டு பார்க்காதே

அழகை ஒப்பிட்டு பார்க்காதே

ஒற்றை பூக்களாய்
இருந்தவரை நாங்கள்
உங்களுக்கு அழகுதான்

அடுத்தடுத்து வித வித
பூக்கள்
அருகில் வர
நாங்கள் உங்களுக்கு
அழகை ஒப்பிட்டு பார்க்க
மட்டும் !

பரவாயில்லை
நாங்கள் நாங்களாகவே
இருக்கிறோம்

ரோஜா மல்லிகை
ஆவதில்லை
மல்லிகை
தாமரை ஆவதில்லை
தாமரை செவ்வந்தி
ஆவதில்லை.

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (23-Aug-20, 10:43 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 161

மேலே