கனவுகளின் படைப்புக்கள்

கனவின் படைப்புகள்

கற்பனைகள் தனது
கதைகளை
படைப்பதை விட

கனவுகள் தனது
கதையை சீக்கிரம்
படைத்து விடுகிறது
என்றாலும் !

கனவுகளுக்கு
கடிவாளம் போட
போராட
வேண்டியிருக்கிறது

சில நேரங்களில்
தாறுமாறாய்
போய் விடுவதால்

இருந்தாலும்
கனவுகளின் படைப்புகள்

கற்பனையை விட
வேகம் தான்.

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (27-Aug-20, 4:03 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 113

மேலே