செண்பகமே செண்பகமே பூஞ்சோலைப் பொற்குடமே

செண்பகமே செண்பகமே பூஞ்சோலைப் பொற்குடமே
கண்ணசை வில்கவிதை பாடிடும் பேரெழில்
பெண்கள் கருங்கூந்த லில்சிரிக்கும் தேவதையே
செண்பகமே குற்றால ஆலயத்து நாயகியே
விண்வளர் பாரிசாத நன்மலர் பூப்போன்று
மண்வளர் பொன்னெழில்பூ வே !