அடி தொழுகின்றேன் இறைவா

அடி தொழுகின்றேன்
ஆருயிர் எந்தன் இறைவா!

இடியென வரும் துன்பங்கள்
ஈனமாய் சீண்டும் இழிகள்
உண்டென்று நீ கண்டால்
ஊழியாய் உடனதனைப் போக்கு ...

எதிரிகள் நெஞ்சில் இல்லை
ஏகமாய் வஞ்சம் இல்லை
ஐசுவரியம் வேண்டவில்லை
ஐவளமும் நாடவில்லை....

ஒளிபடை ஓங்காரனே
ஓதியுனை சரணடைந்தேன்
ஔடதமாய் பிணியை நீக்கி
ஆட்கொண்டு என்னுள் உறைவாய்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (1-Sep-20, 10:26 am)
பார்வை : 72

மேலே