இருள் தின்னும் தீபங்கள்

இருள் தின்னும் தீபங்கள்

நம் வாழ்நாட்களை
தன் முதுகேற்றி
இலக்கு நோக்கிய
நம் பயணத்தின்
இழுவைப் பொறியாய்
நம் நம்பிக்கை!

தாகமுற்ற மரத்திற்கு
தன் முகம் காட்டாது
நீர் ஊற்றும் வேர்களாய்
உரம் ஏற்றுகின்றன
நம் நம்பிக்கையின் நாளங்கள்!

தீபத்தின் சுடரில்
தனக்குத் தானே
சிதை மூட்டிக் கொல்லும்
விட்டில் பூச்சிகளாய்
மன இருளின் சிறகுகள்
தானே எரிந்து சரிகின்றன
நம்பிக்கையின் சுடரொளியில்!
சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (1-Sep-20, 11:15 am)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 104

மேலே