என் காதல் தேவதையே

மனதில் உலவும் நிலவே
மகிழ்வை வீசும் கனவே
உன் நினைவில் உலாவி உலாவி
மகிழ்ந்து மகிழ்ந்து
உயரத்தில் பறந்து பறந்து
உள்ளத்தில் வைத்துப்
பூஜிக்கிறேன் நான் உன்னை
என் காதல், ஊர்க்குருவி
என்று நினைத்தாயா ?
இல்லை அது ராஜாளிக் கழுகு
எங்கே சென்றாலும் நீ
உன்னை விடாமல்
துரத்திக் கொத்திச் செல்லும்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (1-Sep-20, 11:31 am)
பார்வை : 325

மேலே