வலம்வரும் வறுமை
காடு திருத்திக் கழனி யாக்கி
கடுமையா யுழைத்தே பயிரது செய்யினும்,
தேடி வருவ தில்லையே செல்வம்
துணையாய் உழவனை வலம்வரும் வறுமையே..
மாடி வீடு கட்டிட உழைத்தவன்
மண்குடில் தன்னில் ஒதுங்கி யிருக்கிறான்..
பட்டுத் துணிகள் நெய்தவன் பிள்ளை
ஒட்டுத் துணியை உடுத்திச் செல்கிறான்..
படைத்தவன் படைப்பில் பாகு பாடா
பாமரர் தம்மை வாட்டிடும் வறுமையே...!