அன்பிற்குள் அடங்கு - 2
விரைத்து, நீர்த்து , மண்ணோடு மக்கிப்போகும்
மானுடனின் மனதிற்குள் ஏன் இந்த குரூரம் !
ஆணவம் தலைக்கேறி ஆத்திரம் வெளிப்பட்டு
அநியாயவாதிகளின் கொலைவெறி தாக்குதலில்
வீழ்ந்து வேதனைப்படும் வெகுளி உள்ளங்கள் எத்தனை எத்தனை
யோசிப்பதற்குள் யுகங்கள் கடந்து விடும் !
அளவிடமுடியாத ஆற்றல் கொண்டு
அண்டம் தாண்டி எங்கும் நிறைந்திருக்கும்
இறைவனின் ரகசியமே அன்புதானே!
வாழ்ந்து முடித்த வாழ்வின் அடையாளங்கள்
வாயளவில் போகாமல்
வாழ்வியல் சாதனை ஆகவேண்டாமா !
ஆண்டவனாக ஏற்றுக்கொண்ட
ஆகச்சிறந்த மணிதெரெல்லாம்
அன்பைமட்டுமே போதித்தார்கள் என்பது பொய்யோ ?
உயிரிகளின் வரலாற்றில்
அன்பு மட்டுமே அனைத்தையும் உயிர்த்திருக்கிறது
என்பதை உணர்ந்து வாழ் மனிதா !
நெருங்கியவர்களை நேசி
எவரும் உனக்கு எதிரியல்ல
எல்லையில்லாத அன்பை எங்கும் நிலைநாட்டு-
ஆகமொத்தத்தில் அன்பிற்குள் அடங்கு !