இறையை மொழியை இகழாதீர

இறையை மொழியை இகழாதீர

வெண்பாக்கள்

துரைராஜ் படைப்பால் குமுறுது உள்ளம்
அரையை மறைக்கக் கலிங்கம் - திரைமூடிப்
பின்முடிப்பர் மூர்த்தி அலங்காரம் கோயிலில்
சின்மயத்தை அம்மணம்செய் தீர்


தேனாம் யிதழாள் தமிழைத்தே னாக்கினராம்
தேனாள்பேச் சால்செம் மொழியாமே - மீனாளோ
துய்யா லிலக்குமியோ உண்மை தெரியவேண்டும்
ஐயம் விளக்குதல்வேண் டும்


பேதைப் பெதும்பை அரிவைத் தெரிவையர்
வேதனை போக்க வருகிறார் -- காதலிக்க
அல்லவே நும்மானி டச்சென்மம் கேட்டறியும்
எல்லையில்லாத் தேவன் அவன்

ஆசிரியப்பா

எழுத்துக் காமில் பாபுனைப் பெரியோரே
அழுத்திச் சொல்வேன் தவிரும் காதலி
அவய ஒப்பீட்டை இறையுடன் மொழியுடன்
பிறமதத் தினரைப் பின்பற்றி
நடப்பீர் போற்றலெது தூற்றலெது தெரியாதோ

எழுதியவர் : பழனிராஜன் (3-Sep-20, 9:45 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 81

மேலே