கொரோனவினால் நம் நிலைமை

மனைவி சொல்லை மறுக்கவில்லை
என் மனதை ஏனோ மதிக்கவில்லை
வருகின்ற செலவுகள் அவள் கவலை
வருமானம் வந்திட வழியுமில்லை

யோசித்தும் பலன்கள் இல்லை
யாசிக்க மனமுமில்லை
என்று விடியும் என் கவலை
முடியும் தேதி அறியவில்லை

ஆறுதல் சொல்லத்தெரியவில்லை
சொல்லும் ஆறுதல் நியாயமில்லை
தூக்கி நிறுத்த வேண்டிய நானே
சுமையாய் இருப்பதே என் கவலை

எழுதியவர் : Rudhran (4-Sep-20, 8:09 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 73

மேலே