தலைக்கனம்
படித்தவன் தலைக்கனம்
பாதையை மறைக்கும்
பணமுள்ளவனின்
தலைகனம்
பண்பை மறைக்கும்
பறக்கும் பட்டத்தின்
தலைக்கனம்
அதன் கயிறு அறுந்து
போனதும் புரியும்...!!
தன்னால் முடியும் என்பது
தன்னம்பிக்கை
தன்னால் மட்டுமே முடியும்
என்பது தலைக்கனம்....!!
தலை நிமிர்ந்து வாழ
தலைக்கனம் வேண்டாம்..!!
--கோவை சுபா