ஆசிரியர் தினம்
பெற்றோருக்கு பின்
தெய்வத்திற்கு முன்
நமக்கு கிடைத்த
அரிய உறவு..
தன் வகுப்பிற்கு
வந்த பிள்ளைகளை
தன் பிள்ளைகளாய்
பார்க்கும் உறவு..
தாய் கொண்ட அன்பு
தந்தை கொண்ட அறிவுடன்
கண்டிப்பு சேர நம்
வாழ்வை மெருகேற்றிய உறவு..
தான் பெற்ற அறிவை
தளராமல் என்றும்
தன் மாணாக்கருக்கு
பாகுபாடின்றி பகிரும் உறவு..
யாரோ பெற்ற பிள்ளை
என நினைக்காமல்
யாவரும் உயர்ந்த நிலை
பெற நினைக்கும் உறவு..
தன் மாணாக்கர் தன்
தலைக்கு மேல் வளர்ந்து
தலைமை ஏற்றிடினும்
தன் மனம் குளிரும் உறவு..
அன்ன தானம் என்னவோ
ஒரு வேளை பசி போக்கும்..
அறிவு தானம் மட்டுமே
வாழ்நாள் பசி போக்கும்..
எனக்கு பயிற்று வித்த
என்னை ஊக்கு வித்த
நான் தினம் சார்ந்த
ஆசான்கள் அனைவருக்கும்
என் சிரம் தாழ்ந்த
ஆசிரியர் தின வாழ்த்துகள்!
----------
சாம்.சரவணன்