உறங்காத என் விழிகளை கொண்டு 555

என்னுயிரே...


உன் நினைவினில்
காத்திருக்கும் என்னை...

ஒவ்வொரு காதல் ஜோடியும்
என்னை கடந்துதான் செல்கிறார்கள்...

நெஞ்சுக்குள் இருக்கும் என் காதல்
மட்டும் எரிமலையாய் கொதிக்கிறது...

உன்னிடம்
சொல்ல தெரியாமல்...

காதல் மொழிபேசி
முத்தங்களை
பகிர்ந்து கொண்டு...

மரக்கிளைகளில் ஆங்காங்கே
ஜோடி ஜோடியாய் பறவைகள்...


உன்னிடம் காதலை சொல்ல
ஒத்திகை பார்த்து பார்த்து...

உறங்காமல் கழிந்த
என் இரவுகள் எத்தனை...


பகலில் உன்னை
காணும் போதெல்லாம்...

உள்ளம் உன்னிடம்
சொல்ல துடித்தாலும்...

என் கால்கள் உன்னிடம்
மறுக்கிறது...

இந்த பிறந்த
நாளிலாவது என் காதலை...

உன்னிடம்
சொல்லிவிட நினைத்து...

உறங்காத என்
விழிகளை கொண்டு...

உனக்கு ஒரு காதல்
காவியம்
ஐ லவ் யூ.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (5-Sep-20, 6:17 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 568

மேலே