நெய்யூற்றி வேற்றுமை வேள்வி வளர்ப்பார்
பொய்த்தோ ரணம்வாய்ப் பந்தல் போடுவார்
அய்யர்செட் டியார்தேவர் பேதம் பேசுவார்
வய்தல் வசவள்ளி மேடையில் வீசுவார்
நெய்யூற்றி வேற்றுமை வேள்வி வளர்ப்பார்
சொய்சொய் என்றுவா யால்வடை சுடுவார்
பொய்ச்சமத் துவதத்து வம்அழுத்தி உரைப்பார்
கொய்யா மாபலா செந்தமிழ் செப்பிடுவார்
பொய்யடா எல்லாம் அறிவாய்
அய்யா தமிழரே சிந்தித்து எழுந்திடாயோ !
பொய்த்தோ ரணம்வாய்ப் பந்தல் போடுவார்
அய்யர்செட் டியார்தேவர் பேதம் பேசுவார்
நெய்யூற்றி வேற்றுமை வேள்வி வளர்ப்பார்
சொய்சொய் என்றுவா யால்வடை சுடுவார்
பொய்யாய் சமத்துவம் மேடையில் பேசுவார்
கொய்யாக் கனிபலாமா செந்தமிழ் செப்பிடுவார்
அய்யா தமிழரே சிந்தித்து நீயெழு
பொய்புகல் வோரை அறி !
முறையே நே ஆ பா கலி வி இ வெ பா