நதிபோல் ஒரு பயணம்
நேராகவும் ,வளைந்தும்,
வீழ்ந்தும் ,எழுந்தும்,
அமைதியாகவும், ஆர்ப்பரித்தும் நதியைப்போன்றதொரு
மனிதனின் மிக நீண்டதொரு பயணம் ................
காடுகள் மலைகள் நகரம் என
எத்தனையோ நிலைகளை கடந்து
இறுதியில் கடல் என்ற இறுதி எல்லையை நோக்கி ..............
சிலகாலம் நீர்த்தும் பலகாலம் வெற்றாகவும்
நிரம்பிக்கிடந்த ஆற்று இருப்பாக
அவரவர் வாழ்க்கை .................
வாரி சுருட்டியதையும்
வழியில் அபகரித்ததையும்
எங்கோ ஒப்படைத்துவிட்டு
இறுதியாய் ஏமாளியாய் ஏமாற்றத்தோடு .................
வலிமையையும் நிரந்தரமல்ல
என்பதனை எதார்த்தமாய் சொல்லிவிட்டு
வெற்று மணலோடு வெறுமையாய்
வெறித்து கிடக்கும் உண்மை காட்சி .....................