காதல் ஆசை
சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க...
பறவைகள் அதன் மொழியில் பாட...
மரங்கள் சிலுசிலு காற்றை வீச...
நெடுந்தூரம் நீயும் நானும் கைக்கோர்த்து செல்ல ஆசை தான்...
இரு சக்கர வாகனத்தில் உன்னை இருக்கி பிடித்துக்கொண்டு நீண்ட பயணம் நெடுந்தூரம் செல்ல ஆசை தான்...
யாரும் இல்லா கடற்கரை பகுதியில்... நீயும் நானும் மட்டும் கால் பதிக்க ஆசை தான்...
சுற்றி பூந்தோட்டம் சூழ்ந்திருக்க....
நடைபாதையில் புல்வெளி அமைந்திருக்க....
நடுவில் சிறு வீடு கட்டமைத்து...
யாருடைய தொந்தரவு இல்லாமல் இருக்க ...
நீயும் நானும் மட்டும் தனியாக வசிக்க ஆசை தான்...
இரவு நேர முழு நிலவொன்று முகம் காட்ட ...
உன் கையால் உணவருந்தி மகிழ ஆசை தான்..
நான் தாயுடன் இருந்த காலங்கள் கடுகினை போன்றது...
தாயின் மடியை உணர முடியவில்லை...
உன் மடியை தாய் மடியாக உணருகிறேன்...
உன் மடியில் தலை வைத்து படுக்க ஆசை தான்...
நான் சிறிதெனும் முகம் சுழிந்தால் நீ என்னை அணைத்து கொள்ள ஆசை தான்...
எந்நேரமும் உன் தோளில் சாய்ந்து கொள்ள ஆசை தான்...
உன்னிடம் குழந்தையாக மாற ஆசை தான்...
என்றைக்கு நிறைவேறும் என்று தெரியவில்லை....
நான் என்றும் காத்திருப்பேன் உனக்காக... 😂😂😂
Dedicated to my husband....