காதல் கனவாகிவிடுமோ
உன்னிடம் காதல் கொண்டேன்
என்னிடம் உள்ள அனைத்தையும்
உனக்குத்தான் என உறுதியும்
செய்து விட்டேன்
காலையும் நீயே மாலையும் நீயே
என் மூச்சுக்காற்றும் நீயென
நான் மாறிய பிறகும்...
உன் மனதில் எனக்கு இடம் தர
மறுப்பது நியாமா,,,!!
இன்று வரை உன்னிடமிருந்து
எந்த பதிலும் வரவில்லை
என்ன தயக்கம் என்றும் புரியவில்லை
புலம்பி புலம்பி ஓய்ந்து விட்டேன்
முடிவாக ஒன்று
என்னிடம் இரண்டு மனமில்லை
இருப்பது ஒன்று அதுவும் உன்னிடம்
பெண்களின் மனம் மென்மையானது
என்பதை பொய்ப்பித்து போகாதே...!!
--கோவை சுபா