மொழி

அம்மா கற்று கொடுத்த மொழி...
ஆசையாய் கற்று கொண்ட மொழி...
இலக்கியமாய் தித்திக்கும் மொழி...
ஈருலகிற்கும் பொதுவான மொழி...
உலக பொதுமறை உருவாக்கபட்ட மொழி...
ஊரிலுள்ள மொழிகளிலே பழமை வாய்ந்த மொழி...
எந்தன் தாய் மொழி... தாய்க்கு நிகரான மொழி...
ஏனைய மொழிகளிலே முதன்மையான மொழி...
ஐம்பெருங்காப்பியம் முதல் பல இயக்கியம் தோன்றிய மொழி...
ஒற்றுமையை கற்று கொடுத்த மொழி...
ஓலைச்சுவடிகளில் பொறிக்கப்பட்ட மொழி...
ஔவை போன்ற பல புலவர்களால் போற்றி காக்கப்பட்ட மொழி...
எம் தமிழ் மொழி... என்றும் ஓயாத மொழி...

எழுதியவர் : Meera (10-Sep-20, 9:52 am)
சேர்த்தது : Meera
Tanglish : mozhi
பார்வை : 2027

மேலே