மாலவன்
மாலவன்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மற்றும்
வெண்பாக்கள்
ஆசிரியப்பா
சரித்திரப் புராணமில் லையிது சமயமே
தெரியும் எல்லோர்க்கும் இருந்தும் தந்தேன்
மக்களும் அறிந்திட நினைவூட்டு
மக்கள் புரிந்திதை நினைவில் கொள்வீரே
பன்நெ டுங்கா லத்திலுயிர்
பாரில் பலவாய் வாழ்ந்ததாம்கேள்
இன்றும் அதனைப் பறைசாற்ற
இருக்கு தழியாச் சரித்திரமாய்
அன்ற யபார தம்போற்றும்
அழியாப் பத்து அவதாரம்
இன்றெ வருண்டு சிந்திக்க
திருமால் அவதா ரங்கேளே
உயிர்கள் வாழ்ந்த காலமதை
உலகில் கணக்கி டயாருண்டு
பயிர்த்தா வரத்தின் காலத்தை
பட்சி நீர்வாழ் காலத்தை
உயிராம் தேவர் மானுடரும்
ஊர்வ னத்து டன்மிருகம்
உயிரேழ் ஞானி யேயறிவர்
உலகோர் கணக்குத் தவறேகாண்
ஒன்று
பிரளயம் வேறு மகாப்பி ரளயம்
திரளத்தீ யர்கொடுமை என்றால்,- பிரளயத்தால்
பெம்மான் அழிப்பன் வழக்கம் பிரம்மனும்
சும்மா உறங்கு வனாம்
ஊக மாய்யெ தையுந்தான்
உலகோர் கணக்கு செய்வாரே
போக மிகுந்த பூமியைப்
பொழிவால் மூடி னானிறைவன்
யோக பிரம்மன் வேதத்தை
சோமு கசூரன் கடலொளிக்க
மேக வண்ணன் மீனாகி
வேதம் மீட்ட நிகழ்வொன்றே
இரண்டு
மந்தா ரமலைதாங்க ஆமை உருவெடுத்து
எந்திரம் கண்ட அவதார -- தந்திரமே
கண்டார் உயரமிர்தம் எண்ணிலா வானந்தம்
கொண்டார் தவத்தேவ ரும்
அரக்கர் உயிரை சுக்கிரனும்
சந்தி ரநீரால் உயிப்பிக்க
பரத்தின் தேவர் முறைசொல்ல
அரியும் அமிர்தம் பாற்கடலில்
தரமாய் வாசு கிக்கயிற்சேர்
மந்தி ரமலை யால்கடைய
கரவாய் மாலும் கூர்மமாகி
மலையை ஆடாத் தாங்கினாரே
மூன்று
கொடுமை அதிகரிக்க பூமி நிலையில்
தடுமாறிக் கீழ்நோக்கும் போதில் -- தடுத்து
எடுத்துமேலே தூக்கிக் கொடுத்தத் திருவாம்
நெடுமாலின் பன்றி யுரு
அரக்கன் இரண்யாட் சன்கொடுமை
தாங்காப் பூமித் தாழ்ந்திடவும்
அரவ னைக்கும் மணவாளன்
மாலும் எடுத்த அவதாரம்
பரமன் வராக அவதாரம்.
பன்றி முகமு முடல்மட்டும்
நரனின் வடிவில் அவதாரம்
உலகை காக்க எடுத்ததுவே
நான்கு
வாயிற்காப் போனுக்குத் தந்தார் முநிசாபம்
வாயிற்காப் போன்துறந்தான் வைகுண்ட -- வாயில்
பிறந்த இரண்யன் நரசிம்ம மாலால்
இறந்துபோனான் வைகுண் டமே
மால வச்ச மர்செய்ய
பிறந்த இரண்ய கசபுத்தான்
காலத் தவமி ருந்துபெற்றான்
பகலி ரவா யுதமாந்தர்
கால மிருகத் தாலுமுயிர்
சாகா வரத்தை சிவபிரா்னிடம்
கோல நரசிம் மமாலாலே
வீழ்ந்து மாண்டான் குடல்சரிந்தே
ஐந்து
அசுரனவன் நல்லவன் தேவர் விரோதி
கொசுவென மூவுலகை வென்றான் --அசுர
பலியை உலகளந்த் வாமண மால
பலியாக்கி மாபலியென் றார்
மூன்று லகத்தைப் பிடித்தசுரன்
பலிச்சக் ரவர்த்தி சொல்தவறான்
கோன் அசுரன் கண்டும்பர்
ஓடி நடுங்கித் தான்யொளிந்தார்
வான்தே வரச்சம் தீர்த்திடவே
வாம ணவதா ரம்பூண்டு
மூன்ற டிமண்கேட் கத்தந்த
பலியும் பலியாம் பூமியிலே
ஆறு
காமதேனைக் கன்றுடன் கார்த்திய வீரர்ஜுன்
சாமர்த்தி யத்தால் கவர்ந்தனன் -- மாமன்னன்
சாக முனித்தலைக் கொய்ய பரசுராமன்
சாகவிட்டான் சத்திரிய ரை
சமதக்னி யைக்கொல்ல சத்ரியரை வேரறுத்த
சமர்பரசு ராமவதா ரம்
மந்தி ரச்சொல் வேறில்லை
அன்றை பரசு ராமனுக்கு
தந்தை சொல்கேட் டுத்தாயின்
தலையைக் கொய்தான் பரசுராமன்
விந்தைப் பிராம ணப்பிரியன்
வீர சத்தி ரியக்கொலைஞ்சன்
அந்த பீஷ்மர் துரோணர்க்கும்
கர்ண னுக்கும் குருவாமே
ஏழு
எத்தனை ராமன்கள் சீத்தாரா மன்பின்னும்
அத்தனையும் ஆசையில் வைத்தது -- பத்தினியைக
கல்லுருநீக் கிக்காத்தான் கொன்றார் அனைவரும்
பொல்லாரே நல்லார் இலர்
எம்பி ரான்ரா மமாவீரன்
ஏகப் பத்னி கொண்டானாம்
தம்பி களைத்தான் ஐந்தாறு
பலவாக் கிமகிழ்ந் தராகவனாம்
தம்பி யுடனே பல்லசுரர்
தனித்து வாலி மேகநாதன்
கும்ப கர்ண இராவணரின்
கும்ப லைவ தைத்தானே
எட்டு
யெதுகுலத்தில் அப்பலரா மன்பிறந்தான் ஆயின்
அதுபொருந்தா கண்ணன் எனும்நம் -- மதுசூதன்
சத்ரியனே கார்கலப்பை எந்திய அப்பாவி
உத்தமன் அப்பலரா மன்
பலரா மர்கண் ணனினண்ணன்
கதையில் வல்லான் மாவீரன்
பலசா லிதுரி யனுக்குகதை
பயிற்சித் தந்த குருவாகும்
குலக் கொழுந்து கண்ணன்போல்
சூத றியாமா வீரனென்பார்
கலப்பை ஆயுத மேந்தியிவர்
காடசி தருவா ராம்கேளே
ஒன்பது
மொத்த அவதாரம் ஒத்தைக்கீ டாகாது
வித்தைபல வற்றை பிறராலே -- சத்தமிலா
செய்தானே பாரதப்போ ரில்மட்டும் கோடிசிரம்
கொய்தானே ஆயதமேந் தா
மாயக் கண்ணன் பாரதப்போர்
சூத்தி ரதாரி அர்ஜுனனின்
காயம் காத்த சாரதியாம்
யாவும் அறிந்த கபடதாரி
மாய பூத கிக்கொன்று
காளிங் கநர்த்த னமாடியவன்
நாய கக்கண் ணனிவன்தான்
அர்சு னனில்லை மாயவனே
பத்து
குசவர் வனையும் தசாவதார பொம்மை
அசரா கொலுவிலே வைப்பர் -- தசத்திலே
கல்கி ஒதுக்கி குதிரைவீரன் யார்கண்டார்
கல்கிநோக்கிக் காத்தார் சனம்