தமிழே தவமெமக்கு
#தமிழே தவமெமக்கு….!
இந்தியைத்தான் கந்தலாக்கும்
எங்கள் தமிழ்க்கூட்டம்
மந்தியிங்கு ஆட்டமிட்டால்
நையத்தானே புடைக்கும்..!
வெந்தமொழி வேற்றுமொழி
வேட்டையாடி யழிப்போம்
நிந்தனைகள் செய்யுமென்றால்
நெற்றிப்பொட்டில் அடிப்போம்..!
சந்தனத்தின் வாசமிகு
செந்தமிழைப் படிப்போம்
இந்தித்தலை நீட்டுமென்றால்
எட்டியெட்டி உதைப்போம்..!
செங்கரும்பு சாறிருக்க
சித்தங்குளிரக் குடிப்போம்
சிங்கமொழி எங்கள்தமிழ்
எந்நாளும் கர்ஜிப்போம்..!
வடமொழியும் முடமொழியும்
தொடைநடுங்க வைப்போம்
திடத்தமிழை தேன்தமிழை
திகட்டத்திகட்டப் படைப்போம்..!
இற்றுப்போன இந்தியெதற்கு
இடுகாட்டுப் பிணமே
பற்றுடனே வணங்கிடுவோம்
பைந்தமிழை நிதமே..!
#சொ.சாந்தி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
