இளமையாக என்றும்

குன்றிலே குடிகொண்டாய் தமிழ் குலத்திற்கே மூலமானாய்
வேலாயுதம் அதைத் தாங்கி வேண்டிவோருக்கு அரண் ஆனாய்
தங்கமான தமிழ்க் கொண்டு தரமான நூல்கள் படைத்தாய்
விஞ்ஞான அறிவை ஊட்டி விதவிதமாய் மருந்து தந்தாய்
பின்னாளில் மொழி காக்க பிறந்த போதே இலக்கணம் வைத்தாய்
இளமையாக என்றும் காட்சித் தந்து ஐயாயிரம் ஆண்டு கடந்தாய்
தமிழ் கற்க வந்தோருக்கெல்லாம் தலைமகனே நீ தமிழ் தந்தாய்
ஆறறிவு பெற்ற போதே அறிந்த மொழி தமிழென்று முருகனே மூலமானாய்
ஆதி தமிழே
........ நன்னாடன்.