இளமையில் வறுமை கொடியது

வறுமையின் அருமை இளமையில் அறிந்தால் வாழ்வின் இனிமை முழுமைஅடைவதில்லை

காதலில் மட்டும் அல்ல கல்வியிலுதான்

கல்லூரியின் வாசல் தொடுவதில்லை

காதல் தேசத்தில் சென்று கவிதை எழுதுவதில்லை

காத்திருந்து காலத்தால் காதல் கனிந்தாலும்

குடும்ப நிலை அறிந்து கடல்தாண்டா நினைக்கையில்

காத்திருந்து வந்த காதலை கை கழுவும் நிலைதான்

வானில் பறந்து வேற்று மண்ணில் வசித்து

வியர்வை சிந்துகின்றேன் வறுமையை போக்கிட

இளமை தொலைந்ததே என்று என்னும் போது குடும்பம் வறுமை ஒழிந்ததே என்று மனம் மகிழ்கிறேன்

எழுதியவர் : த. தமிழ்வாணன் மேல கல்லூர் (10-Sep-20, 12:39 pm)
பார்வை : 1038

மேலே