அன்புள்ள அப்பாவே

நான் நேசிச்ச முதல் உறவு
நீங்கத்தானே அப்பா!
நான் வாசிச்ச முதல் கவிதை
நீங்கத்தானே அப்பா!
நான் வசிச்ச திருக்கோவில்
நீங்கத்தானே அப்பா!

தெய்வம் இன்று ஏனோ!
தென்னங்கீற்றில் உறங்குது அப்பா!

கண்ணுக்குள் இமையாக
காத்தாயே! என்னை
கண்ணீர்க் கடலில் விதி
தள்ளிவிட்டது என்னை

கைப்பிடிச்சு நான் நடந்தப் பாதையில
பன்னீர்த்துளி சிந்துது உன் மாலையில
என் கண்ணீர்த்துளி புரண்டோடுது  சாலையில
என்னைத் தேற்ற எனக்கினி நாதியில

நான் நேசிச்ச முதல் உறவு
நீங்கத்தானே அப்பா!
நான் வாசிச்ச முதல் கவிதை
நீங்கத்தானே அப்பா!
நான் வசிச்ச திருக்கோவில்
நீங்கத்தானே அப்பா!

கோர்த்து வச்ச பூவெல்லாம்
மாலையாகுமே?
நாத்து வச்ச வயலெல்லாம்
பயிராகுமே?
நேத்து வச்ச விதையெல்லாம் செடியாகுமா?
சேர்த்து வச்ச உன் நினைவெல்லாம்
செலவாகுமா? அப்பா

நடந்தது எல்லாம் நடப்பு உடனே முடிந்திடுமா? அப்பா
கடந்தது எல்லாம் காரியத்தில
கரைந்திடுமா? அப்பா
காலம் பல ஆனாலும்
உன் முகம் மறைந்திடுமா!
கதறி நான் அழுதாலும்
கண்ணுக்குள் கண்ணீர்த் தீர்ந்திடுமா!

இறந்த உடன் பெயர் மாறிப்போனது
ஏன் அப்பா?
இருக்கும் வரை உழைத்தாயே! இதற்கு தானா?  அப்பா
வாயைக்கட்டி வயித்தக்கட்டி சேர்த்தாய் எதற்கு அப்பா?
வாசல் வந்து உறங்கவா? சொல்லுங்க
அப்பா!

நான் நேசிச்ச முதல் உறவு
நீங்கத்தானே அப்பா!
நான் வாசிச்ச முதல் கவிதை
நீங்கத்தானே அப்பா!
நான் வசிச்ச திருக்கோவில்
நீங்கத்தானே அப்பா!

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (10-Sep-20, 8:31 pm)
பார்வை : 3871

சிறந்த கவிதைகள்

மேலே