பலிக்கடாக்கள்

ஆட்டிடையன் ஆட்டு மந்தையை
மேய்த்துச் செல்கிறான் வழியெல்லாம்
அவன் கவனம் அந்த ஆடுகளின் மேல்
கண்ணுங் கருத்துமாய்க் காத்து செல்கிறான்
அவன் செல்வதுதான் எங்கே இந்த
ஆடுகளை மேய்த்துக்கொண்டு.......
ஆம் அவன் போகுமிடம் 'இறைச்சி கூடம்'
ஆட்டிடையன் ஆடுகளைக் காக்க
மறந்தானா ...........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Sep-20, 8:34 pm)
பார்வை : 81

மேலே