நான் கவிஞன் அல்ல

நான் கவிஞன் அல்ல

நான் கவிஞன் என்று ஊர் நம்புகிறது..
ஆனால்..
நான் கவிஞன் அல்ல
நான் ஓர் மொழிபெயர்ப்பாளன் மட்டுமே!
உன் விழிகள் வீசிடும் வார்த்தைகளையும்..
உன் அடர்ந்த மௌன மொழியின் அழகையும்..
உன் இதழோரம் பூக்கும் புன்முறுவலையும்..
நான் மொழிபெயர்க்கிறேன்..
அது கவிதையாய் வடிவம் பெறுகிறது!!
நான் கவிஞன் ஆகிறேன்!!!

என்னை 'கவிஞன்' ஆக்கும்
'கவிதை' நீ..!!!
- கனிஷ்கா ஜெயக்குமார்

எழுதியவர் : கனிஷ்கா ஜெயக்குமார் (12-Sep-20, 12:05 pm)
Tanglish : naan kavingan alla
பார்வை : 229

மேலே