எதிர் நீச்சல் போடு இளைய தலைமுறையே

ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உலகத்தில் இல்லை
ஓராயிரம் வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன -
பொறுமையோடு முயற்சி செய்
பூமியில் புதையல்களுக்கு பஞ்சமில்லை !

உன் எதிர்காலத்திற்காக
ஏகப்பட்ட கணக்குகளை யாராரோ போடலாம்
உனக்கான லட்சியத்தில்
நீ மட்டும் உறுதியாக இரு !

வாய்ப்புகள் இன்றொண்டு போனால்
இன்னொன்று இருக்கிறது என்பதுதான் எதார்த்தம் -
வாய்ப்புகளின் கதவுகள்
நிரந்தரமாய் சாத்தப்படுவதில்லை !

விரக்தியில் விடியல் கிடைத்ததாய்
வரலாறுகள் இல்லை
விடாது துரத்துதலில்தான்
விடியல் கிடைக்கும் மறந்துவிடாதே !

கடினமான பாதைகளை கடந்தால்தான்
காரியங்களை சாதிக்கமுடியும்
தன்னம்பிக்கை உளியால்
தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்று !

நீ கடக்கவேண்டிய பயணம் மிக நீண்டது
உறுதியோடு உள்ளத்தை திடப்படுத்து -
ஆயிரம் தொல்லைகள் வந்தாலும்
எல்லைகளை எளிதாய் கடப்பாய் !

முடியும் என்று முயன்று பார் ,
முயற்சிகள் வெற்றிபெறும்
காலம் உனக்கு கைதட்டும்
காலன் உனக்கு கைகட்டுவான்!

எழுதியவர் : விநாயகமுருகன் (12-Sep-20, 9:39 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 348

மேலே