"வென்றவனின் காதல் தோல்வி"kavipriyan
நான் காதல் எனும்
வீதியிலே...........
காதலியின் மனதை
கேட்டு.............
பிச்சை எடுத்தவன்..............!
மழை நேரத்தில் வரும்
நட்சத்திரம் போல்........
தூங்கும் நேரத்தில் வரும்
கவிதைகளை..........
வாசிப்பவன்..................!
நான் கட்டிய கூரைவீட்டில்
படுத்து கொண்டு.................
கட்டாத கூரையில் இருக்கும்
நிலவை.............
வாங்க ஆசைபட்டவன்...........!
ஊர் தூங்கும் நேரத்தில்
நான்...........
தூங்காமல் ஊரை சுற்றி
வரும்..............
இரவு காவலனானவன்..................!
காதலியின் மனதை தேடி
தேடி...................
அவள் காலடியில் என்
மனதை............
தொலைத்தவன்................!
தனிமையின் தவிப்பை எண்ணி
அவளிடம்
தொலைந்த என் மனதை
கேட்டு................
தொல்லை செய்தவன்..............!
என்காலடியில் பலர் மனம்
மடிந்ததுண்டு............
அதில் எது உன்மனம்
என்று..............
அவள் சொல்ல கேட்டவன்.......!
குடி நீராக இருந்த
கடலின்....................
ஓரத்தில் அமர்ந்து கண்ணீரை
கலந்து..............
உப்பு நீராக மாற்றியவன்.............!
பூவுலகம் அவள் என்று
நினைத்தவன்..............
யார் என்று இவ்வுலகம்
கேட்டு................
திகைத்து நின்றவன்.......................!
ஆயுதம் அற்றவனாக எனை
நினைத்தவன்...........
அன்னையின் அன்பே ஆயுதம்
என்று.................
உணர்ந்தவன்..............!
என்னை யார் என்று
கேட்ட.......
இவ்வுலகை என் புகழ்
பேசவைக்க..........
நினைத்தவன்...........!
அதற்காக உடைந்த இதயத்தை
ஒட்டவைத்தவன்............
அதில் கவிதை எனும்
கலையை.........
நட்டுவைத்தவன்............!
என் கவிதைகளை ஓங்கி
வளர்த்தவன்......................
நானோ இவ்வுலகம் போற்றி
புகழ..................
வளர்பவன்................!
இத்தனைக்கும் காரணம் காதல்
தான்...........
இதனை நித்தம் எண்ணி
பார்ப்பது..............
இந்த கவின்ஞன் தான்................!
by
kavipriyan