நீயும் சிவனா
நீயும் சிவனா
குறள் வெண்பா
நீயும் சிவனாவாய் யென்றான் திருமூலன்
பிறநாட்டில் சொன்னார் யெவர்
எண்சீர் விருத்தம்
“
நீயும் மேயோர் சிவமென,ச் சொல்லு
என்று மீசன் தொழுபவர் ஆவார்
தீய எண்ண முடையவ னாகான்
நீசர்க் கென்றும் வராதுசொல் ஞானம
நோயும் போக மருந்துகள் சொன்னார்
பத்து டன்யெட் டுமாமுநி யெல்லாம்
காயும் தெய்வம் நிகரவர் சொல்லும்
மாற்றம் காணா முநிகளின் பேச்சே
நீயும் சிவனாவாய் யென்றான் திருமூலன்
பிறநாட்டில் சொன்னார் யெவர்
ராஜன்பழனி
"யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே”
திருமூலர்