வானவில்

வானத்தை அலங்கரிக்கும்
வண்ண வண்ண மலர்வளையம் தானோ
இந்த வானவில் இல்லை இது காமன் வில்லா
இல்லை இதுதானோ இந்திர தனுசு
அதில் அவன் தொடுத்து எய்திடும் அம்பு
அதிரும் இடிகள் தானோ எது எப்படியோ
என் மனதிற்கு என்றும் உவகைத் தருவது
இந்த வானவில்தான் எழுத எழுத
இன்னும் இன்னும் எழுதவைப்பது இது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Sep-20, 8:36 pm)
Tanglish : vaanavil
பார்வை : 106

மேலே