சமையலறைச் சன்னலில் ஓர் இசைக்குயில்
சமையலறைச் சன்னலில் ஓர் இசைக்குயில் பாடிக் கொண்டிருந்தது
சமையல் செய்யும் இளங்குயிலும் உடன் பாட முயன்றாள்
அவள் கையிலிருந்த பாத்திரம் தற்செயலாய் கீழே விழ
அதிரும் ஓசை எழ
இசைக்குயில் விருட்டென்று எங்கோ பறந்து சென்றது ...
பாத்திரத்தின் நாராச ஓசைக்கு பயந்து அல்ல
நாதத்திற்கும் கீதத்திற்கும் உகந்த சூழ்நிலை இல்லை
பாடுபவளுக்கும் சரியான சிரத்தை இல்லையே
என்று எண்ணியே பறந்து சென்றது !
அன்று பறந்து சென்ற இசைக்குயில் இன்று வரை
அவள் ஜன்னலுக்கு திரும்பி வரவே இல்லை !