கட்டை விரல்
மனிதர்களின் குணங்கள்
மாறுபட்டு இருப்பதை கண்டு
பிறரிடம் வருத்தம் கொண்டு
சொல்லும்போது...!!
அவர்கள் நம் ஆறுதலுக்காக
கைகளில் ஐந்து விரல்களும்
ஒன்றாக இல்லையே.
அதுபோல்தான்....
மனிதர்களின் குணங்களும்
ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை
வித்தியாசம் இருக்கும்..
கவலை எதற்கு என்பார்கள்...!!
உண்மைதான்...!!
ஆனால்...ஐந்து விரல்களில்
வித்தியாசம் இருந்தாலும்
ஒருவனின் கைகளில்
கட்டை விரல் இல்லையெனில்
மற்ற விரல்கள் எல்லாம்...
தங்களது மதிப்பினை இழந்து
நிற்கும் உபயோகம் இல்லாமல்..!!
--கோவை சுபா