ஐக்கூ கவிதை

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

இன்றும் இருக்கிறது

கடிதம் எழுதும் பழக்கம்

பள்ளி கட்டுரையில் மட்டும்

🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩

துணி தைப்பவர் ஆடையில்

அங்குமிங்கும் இருக்கிறது

கிழிசல்கள்

🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢

மது ஒழிப்பு பேரணி

முடந்ததும் சென்றனர்

மது கடைக்கு

🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇

நீர் நிலைகளில் நீரில்லாததால்

ஏமாற்றத்தோடு செல்கிறது

நிலா

🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥

கயிறு வலிமையானது என்றாலும்

கட்ட முடியாது

பூக்கள்


*கவிதை ரசிகன்*

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

எழுதியவர் : கவிதை ரசிகன் (20-Sep-20, 7:04 pm)
Tanglish : aikkoo kavithai
பார்வை : 68

மேலே