என் காதல் எப்போது நிஜம் என்று உணர்வாயோ 555

ப்ரியமானவளே...


என் அன்பை நீ
உண்மையென உணரும் வரை...

உனக்கு
நான் யாரோதான்...

என்னை நீ
பிரிந்திருக்கும்
இந்த நாட்கள்...

உனக்கு
சந்தோசத்தை
கொடுக்கலாம்...

என் அன்பை நீ
உணரும்
நேர
ம் உணர்வாய்...

இந்த பிரிவு எவ்வளவு
கொடியது என்று...

என் காதல் எப்போது
நிஜம் என்று உணர்வாயோ...

அப்போது வந்து பார் அன்றும்
உனக்காக மட்டும் காத்திருப்பேன்...

நீ என்னோடு பேசும்
நிமிடங்கள்தான் குறைந்தது...

நான் உன்னை நினைக்கும்
நிமிடங்களோ கூடிக்கொண்டே செல்லுதடி...

நான் இறக்கும் நிலை வருமுன்னே
வந்துவிடடி என் கண்ணே.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (20-Sep-20, 9:10 pm)
பார்வை : 576

மேலே