இரையூட்டி

இரையூட்டி
🌾🌾🌾🌾🌾🌾
காழகத்தில் அப்படியொரு சிக்கனம்
கழனி மட்டுமே அவனுக்குச் சொப்பனம்

குதிர் மட்டும் பெரிதாய் வேனும்
குடியிருக்க குரம்பை போதும்

நிலத்தை அசும்பாக்கி
நெற்பயிரை நடவு செய்து

கங்குலிலும் பல நேரம்
கண்விழித்தே பாடுபட்டு

அல்கல் பயிர் காத்து
அறுவடையும் முடித்தெடுத்து

வரப்பினை அத்தமாக்கி
வாரிக் கட்டி களம் சேர்த்து

உதிர்ந்த நெல் மணியோ
உறவிக்கு உணவாக

மாடுகளைச் சகடம் பூட்டி - நெல்
மணிகளையும் விற்று வந்து

பசிக்கு உணவயின்று
பக்குவமாய் மிச்சம் பிடித்து

வங்கிக் கடனுக்கு வட்டியதை கட்டி கூட
கடங்காரன் எனும் கவ்வை காதினில் ஒலித்தாலும்

மணலிலே சிற்றில் கட்டி
மகனங்கு விளையாடப்பார்த்து

கடனில்லா நிலமாக்கி மகனுக்கு கொடுத்து விட
காலமெல்லாம் ஓர்வோடு கடைசி வரை உழைத்திடுவான்.

க.செல்வராசு

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

எழுதியவர் : க.செல்வராசு (22-Sep-20, 2:02 pm)
பார்வை : 83

மேலே