அர்த்தமுள்ள முது மொழிகள்

ஒலிப்பதிவு நாடா ....
புத்தம் புதிதாக இருக்கையில்
அதில் பதிவு செய்த பாடல்
பிசிறில்லாது ஒலிக்கும் போட்டு கேட்கையில்

அதுபோல ஐந்து வயதில் நான்
கற்று மனதில் பதிந்த பாடல்கள்
இன்றுவரை மறந்தேன் இல்லை
இன்றோ புதியதாய் ஒன்றை
மனப்பாடம் செய்ய மனதில்
பதிவாக கஷ்டப் படுகிறது... ஏன்
பிள்ளைப் பருவத்தில் மனதில்
களங்கமில்லை கல்மிஷங்கள் ஏதுமில்லை
அந்த புதிய ஒலிப் பதிவு நடாப்போல் ..
பருவ வயது... அதற்கு பிறகு வரும்
பருவங்கள்..... மனதில் மாசு நிரப்ப
'அழுக்கு படிந்த ஒளி நாடாப்போல்
நல்லதை உள்ளுக்கு வாங்க சிரமம்

அதனால்தான் அவ்வை வாக்கு,,,,,
'ஐந்தில் வளையாதது ஐம்பதில்
வளையுமா' மற்றும்
'பசுமரத்தில் அடித்த ஆணிபோல்
இம்முது மொழிகள்

நல்லதை ஏற்போம், கற்போம்
நலமான வாழ்விற்கு இளமையிலேயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Sep-20, 2:03 pm)
பார்வை : 240

மேலே