கண்ணம்மா 5

தற்கொலைக்கு முயற்சிக்கும் அந்த பெண்ணை காப்பாற்றியதும் அவள் கோபத்துடனும் கண்ணீருடனும் யாரு நீங்க என்ன விடுங்க நான் சாகணும் நான் இனி இந்த பூமியில் இருந்தால் அது இந்த பூமிக்கு பாரம் என கூறிக்கொண்டு மீண்டும் மேலே இருந்து கீழே குதிக்க முயற்சிக்கும் அந்த பெண்ணை தடுத்து மோகன் சரிம்மா நீ சாகு அட்லீஸ்ட் சாகறதுக்கு முன்னாடி எதுக்காக சாகுற அப்படிங்கறத உன் மனசுல உள்ள அந்த ஒரு அழுத்தத்தை என்கிட்ட சொல்லிட்டாவது சாவு ஒரு பத்து நிமிடம் தாமதமாக இறப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போகாது இல்லையா... எனக் கூறி அவளை சமாதானப்படுத்தி அருகில் உள்ள கையேந்தி பவனில் அவளுக்கு உணவு வாங்கிக் கொடுத்து இருவரும் மீண்டும் தனிமையில் உள்ள அந்தத் தெருவில் சாலையோரம் இடப்பட்டுள்ள அந்த இருக்கையில் அமர்ந்து பேசுகின்றனர்..

அப்பொழுதுதான் அந்தப் பெண் தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்றும் அது தனக்கு அவளது கணவனிடமிருந்து வந்ததாகவும் சில மாதங்களுக்கு முன் அவளது கணவன் இறந்துவிட இந்த விஷயம் இந்தப் பெண்ணின் கணவர் வீட்டாருக்கு தெரியவர அவர்கள் என்னமோ இந்த பெண்ணால்தான் தன் பையனுக்கு எய்ட்ஸ் வந்துவிட்டதாகவும் இவள் நடத்தை கெட்டவள் என கூறி துன்புறுத்தி இவளை வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும் தன் தந்தையிடம் சொல்லி அழும் பொழுது தன் தந்தையும் தன்னை ஏற்றுக் கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், துரத்தி விட்டதாகவும் சொல்லி அழுகிறாள்.. அது மட்டுமல்ல தன் கணவருக்கு எய்ட்ஸ் அவர் மூலமாக தனக்கும் அந்த நோய் வந்துவிட்டது என்பது இவள் கர்ப்பமாக இருக்கும் பொழுது எடுத்த ரத்தப் பரிசோதனையில் தெரியவந்தது ஆதலால் தன் கருவை கூட கலைத்து விட்டதாகவும் கூறி அழுகிறாள்... அதற்கு மோகன் சரிமா இதற்காக நீ சாகத்தான் வேண்டுமா ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை தேடிக் கொள்ளக் கூடாதாjQuery17106251405797483625_1640998610410 என்று கேட்க அதற்கு நான் வீட்டை விட்டு வெளியில் வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது பசிக்கு கையேந்தினால் கூட பார்க்கும் ஆண்கள் என் கையை பிடிக்கத்தான் எண்ணுகிறார்கள் தவிர எனக்கு உதவும் எண்ணம் யாருக்கும் வரவில்லை இங்கு.. சரி வயிற்றுப் பசி ஆற்ற அவர்கள் இச்சைக்கு உடன் பட லாம் என்றால் என் நோயை மறைத்து அவர்களுடன் செல்ல மனமில்லை எனக்கு.. இவ்வாறாக நோய் இருக்கிறது என்று நான் சொன்னதும் அவர்கள் பயந்து ஓடி விடுகின்றனர்... பசியோடு வாழும் வழியை இறைவன் இங்கு யாருக்கும் சொல்லித் தரலையே இந்த போராட்டத்தை விட ஒரு நிமிடம் மரணம் எவ்வளவோ மேலானது என எண்ணி தான் இந்த முடிவுக்கு வந்தேன் என சொல்லி வருந்துகிறாள்...

மோகன் உடைந்து விடுகிறார் அவர் அந்த பெண்ணிடம் தவறே செய்யாமல் நீ தண்டனையை அனுபவிக்க துணிந்து விட்டாய் தவறு பல செய்தும் நான் இங்கு திரிந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்ல அதற்கு அந்தப் பெண் ஒன்றும் புரியவில்லையே என கேட்கிறாள் அதற்கு மோகன் இதுவரை அவர் வாழ்வில் நடந்த விஷயங்களும் அவருடைய மகளின் மீது ஏற்பட்ட ஈர்ப்பையும் அதனால் அவர் தவிக்கும் தவிப்பை எடுத்துக் கூறுகிறார் கேட்டுவிட்டு இருவரும் ஒரு வித அமைதியில் அமர்ந்திருக்க திடீரென மோகனுக்கு ஒரு எண்ணம் உதிக்கிறது அவர் அந்த பெண்ணை பார்த்து கேட்கிறார் அம்மா உன்னை என் சகோதரியாக நினைத்து கேட்கிறேன் நீ என்னுடன் வந்து என் மகளுடன் எங்கள் வீட்டில் தங்கி விடுகிறாயா நான் சில நாட்கள் என் மகளை விட்டு தள்ளி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் அதுதான் என் மகளுக்கு நல்லது நான் கூட இருக்க ... அவளை பார்க்க பார்க்க என் எண்ணம் மாறுமா என தெரியவில்லை என் மகளுக்கு உன்னைப் போன்ற ஒரு துணை இருந்தால் நான் சில நாட்கள் தைரியமாக தள்ளி இருப்பேன் மாற்றம் என்பதும் எனக்கு பிறக்கும் என்று கூறியதைக் கேட்டதும் அந்தப் பெண் நிச்சயமாக என்னை நீங்கள் சகோதரி என்று சொன்னபோதே
நீங்கள் கேட்ட அந்த உதவியை செய்ய தயாராகி விட்டேன் அனாதையாக போகும் இந்த உயிர் இரண்டு நல்ல உறவுகளை மேம்படுத்த பயன்படுகிறது என்றால் நிச்சயம் வருகிறேன் ஆனால் உங்கள் மகளிடம் என்னை என்னவென்று அறிமுகம் செய்வீர்கள் நீங்கள் என்ன சொல்லி அங்கு இருந்து கிளம்புவீர்கள் என்று கேட்கிறாள்..

அதற்கு மோகன் சிறிது யோசித்துவிட்டு நான் என் மகளிடம் போன் செய்து நீ எனது தூரத்து உறவு என்றும் அவளுக்கு அத்தை முறை என்றும் கூறுகிறேன் என்கிறார்... எங்களுக்கு உறவு என்று சொல்லி யாரும் எங்களுடன் அத்தனை தொடர்பில் இல்லை ஆதலால் என் மகள் சொன்னால் நம்புவாள் என்று கூறி அந்த தன் மகளுக்கு போன் செய்கிறார் மோகன் போனை எடுத்து குழலி எங்க போயிட்ட மணி ஒன்பது ஆச்சு இன்னும் ஆள காணோம் நான் உனக்காக சாப்பிடாம வெயிட் பண்றேன் என்று சொல்லும்போது மீண்டும் மோகனின் கண்கள் தழும்புகின்றது.. அதை மறைத்துக் கொண்டு பதிலளிக்கிறார் மோகன், இல்லடா அப்பாவுக்கு ஒரு மீட்டிங் அதுமட்டுமில்லாமல் அப்பா இன்னைக்கு தற்செயலா என்னுடைய சித்தி பொண்ணு அதாவது உங்க அத்தையை சந்தித்தேன் இதுவரைக்கும் நீ அவளை பார்த்ததில்லை அவங்களுக்கு ஏதோ குடும்பத்தில் ஒரு பிரச்சினையாம் அப்பாவைப் பார்க்க வந்தாங்க கொஞ்ச நாள் அவங்க உன் கூட தான் தங்க போறாங்க நாங்க ரெண்டு பேரும் ஒரு அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவோம் என்று கூற குழலி ஒருவித சந்தோசத்தில்...வாவ் எனக்கு அத்தை இருக்காங்களாjQuery17102002200566196919_1640998758982 அதுவும் இப்ப வராங்களா?? என ஆச்சரியத்துடனும் சந்தோஷத்துடனும் கூறுகிறாள்... பேசி முடித்ததும் இருவரும் அங்கிருந்து நடக்கின்றனர்...

வீட்டுக்கு சென்றதும் குழலி ஒரு வித பாசத்தோடு தனக்கு அத்தை என்று சொல்ல ஒரு உறவு இருக்கிறது என்ற சந்தோஷத்தோடு வரவேற்கிறாள் குழலியை கண்டதும் அந்த பெண்ணிற்கும் எதோ ஒரு பற்று குழலியை கட்டித்தழுவி நெற்றியில் முத்தம் இடுகிறாள்.. குழலியின் அருகில் நின்று கொண்டு மோகனை நன்றி கலந்த ஆனந்தத்தோடு காண்கிறாள் அந்தப்பெண்...
சிறிது நேரம் பேச்சிற்கு பிறகு குழலி படுத்திருக்கும் அவள் அறையில் அந்தப் பெண்ணும் படுக்க செல்கிறாள்...
மோகன் உயிரை பிரியப் போகும் உடல் போல் ஏதோ ஒரு வேதனையில் ஹாலில் அமர்ந்திருக்கிறார் சில யோசனைக்கு பிறகு ஒரு காகிதத்தில் தன் மகளுக்கு ஒரு கடிதம் அதில் தனக்கு வேலை நிமித்தமாக சில நாட்கள் வெளியூர் செல்ல வேண்டி இருப்பதாகவும் அதை உன் முகத்தைப் பார்த்து எனக்கு சொல்ல தைரியம் இல்லை என்றும் நீ எனது மகள் மட்டுமல்ல என்னை பலமுறை பல விஷயங்களில் காப்பாற்றிய நல்வழிப்படுத்திய நெறிப்படுத்திய என் அம்மா என்றும் நான் வரும்வரை உன் அத்தை அரவணைப்பில் நீ உன்னை பார்த்துக் கொள் விரைவில் இந்த மோகன் உனக்கு உறுதுணையாக பாதுகாப்பாக இருக்கும் அப்பாவாக திரும்பி வருவேன் என்றும் எழுதி அதை அவள் படுக்கையின் அருகில் வைத்து கிளம்புகிறார் இரவு மணி ஒன்றாகிறது தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறும் அந்த நிமிடம் இவர் அடைக்கலம் கொடுத்த அந்தப் பெண் எழுந்து கண்ணீருடன் போகாதீங்க என்பது போலவும்....
உங்கள் மகள் இனி எனக்கும் மகள் தான் என்பது போலவும்...
இந்நேரம் பிணமாக சாலையோரம் கிடந்து இருப்பேன் ஆனால் எனக்கு மறுவாழ்வு கொடுத்த உத்தமர் நீங்கள் என்பது போலவும்...
தன் பார்வையாலும் முக பாவனையால் காட்ட இவர் அந்தப் பெண்ணிடம் ஏதும் பேசாமல் இரு கை கூப்பி ஒரு நன்றியை தெரிவித்து வேகமாக வெளியேறுகிறார் பௌர்ணமி நிலவில் தென்றல் வீசும் இரவில் மோகன் கண்ணீர் துளிகள் உடன் கடந்து செல்கிறார் மனிதனாக திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன்....

எழுதியவர் : ஜீவன் (24-Sep-20, 1:29 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 92

மேலே