நீ ரவுடின்னு நிரூபிக்க என்னடா ஆதாரம்

அண்ணே உங்க கட்சிலே ரவுடிங்களை எல்லாம் சேத்துக்கறீங்களாம். அதோட கட்சில பதவியும் தர்றீங்களாம். எம் பேரு மொட்டை பாலா. உங்க கட்சில சேந்ததுக்கு அப்பறம் எம் பேரை பழ. பாலான்னு மாத்திக்கிறேன். எங்கப்பன் பேரு பழனி. எங்கிட்ட அம்பது ரவுடிங்க பயிற்சி எடுத்துக்கிறாங்க. அவுங்க பேரு பட்டியலியும் ஃபோட்டோவையும் பாருங்க அண்ணே
@@@@@@@
நீ ரவுடிங்கிறதுக்கு என்னடா ஆதாரம்?
@@@@@@@
அண்ணே என்னைப் பத்தி எல்லாப் பத்திரிக்கையிலும் வந்த செய்திகளைப் பாருங்க. எம் மேல மொத்தம் அம்பது வழக்கு உள்ளது..அதில கொலை முயற்சி வழக்கு பத்து. இதுவரைக்கும் பக்கத்து காவல் நிலையத்தில் பதிவாகி இருக்குது. சந்தேக இருந்தா காவல் ஆய்வாளர் அம்மையப்பனைக்கு ஃபோன் பண்ணிக் கேட்டுப்பாருங்க.
@@@@
வேண்டாம்டா மொட்டை பாலா. நீ சொல்லறத நூத்துக்கு நூறு நம்பறேன். நீயும் உன்னிடம் பயிற்சியில் உள்ள அம்பது இளம் ரவுடிங்களும் இந்த விண்ணப்ப படிவத்தில கையெழுத்துப் போட்டுட்டு கவர்ல் உள்ள அன்பளிப்பை எடுத்துக்குங்க. இந்த நிமிசத்தில இருந்து நம்ம கட்சி வளர்ச்சிக்காக பல தியாகங்களச் செய்யணும். உங்க மோட்டார் சைக்கிள நீங்களே நெருப்பு வச்சுக் கொளுத்திட்டு நம்ம எதிரிக் கட்சி மேல பழியைப் போடணும். அப்படி எரிக்கிறவனுக்கு புது வண்டியா வாங்கித் தருவோம். தீயணைப்புத் துறைக்கு தகவல் சொல்லிட்டு உங்க வீட்டு மேல பெட்ரோல் குண்டை வீசணும். தீப்பத்தி எரியும் போது தீயணைப்பு வண்டி வந்துடும். வீட்டுக்கு அதிக பாதிப்பு இருக்காது. இதெல்லாம் செய்யவன்தான்டா உண்மையான கட்சி ரவுடி.
@@@@@@@@
அண்ணே நீங்க சொன்னதுக்கு மேலயே அதிகம் செஞ்சு நம்ம கட்சிக்கு அதிக விளம்பரத்தைத் தேடிக்கொடுப்போம். கவலைப்படாதீங்க.
@@@@@@@
உங்கள நம்பறன்டா மொட்டை. நம்ம கட்சி வேகமா வளரும் தினம் மலரும் நந்தியாவட்டை பூப்போல..

எழுதியவர் : மலர் (23-Sep-20, 11:59 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 90

மேலே