ரவுடிகளுக்கு அழைப்பு
நாங்கள் செய்யாத தந்திரமில்லை
எங்கள் கட்சியை வளர்க்க!
மக்கள் ஏனோ எங்களை ஒதுக்கி வைத்து ஓரங்கட்டி வைக்கிறார்கள்!
தில்லுமுல்லு பலவும் செய்தோம்
அவமானப் பட்டதுதான் மிச்சம்!
நல்லவர்கள் ஒதுங்கி வேடிக்கை
பார்க்கிறார்கள்.
எங்கள் கொள்கையை வெறுப்பவரே நாட்டில் அதிகம்.
எப்படி கட்சியை வளர்ப்பது?
நல்லவர் ஒதுக்கும் கட்சியாகி
ஊர் சிரிக்கும் நிலை எங்களுக்கு.
புதிய வழியொன்றைக் கண்டறிந்த நாங்கள் காசு கொடுத்தாவது உறுப்பினர்களைச் சேர்த்தாக வேண்டும்.
யாரும் செய்யாத புதியவழி
ரவுடிகளை அழைத்து கட்சியில்
சேர்ப்பது பலவழிகளில் கட்சியை வளர்க்கும்.
" ஊரிலுள்ள ரவுடிகளே வாருங்கள்
ஆளில்லா எங்கள் கட்சியில் சேருங்கள்
உங்கள் தேவையை நிறைவேற்றவே நாங்கள்.
பதவி உண்டு பலவித உதவியும் உண்டு!
வாருங்கள் ரவுடிப் பெருமக்களே
இணைவீர் எங்களுடன் கைமேல் பலன் பெறுவீர்!