காதுகள் இரண்டை
நெட்டையா உடலை வெச்சு
ஒத்தையா உயிரை வெச்ச
வித்தகன் அவனை எண்ணி
பக்தியில் ஆழ்ந்து விட்டேன்
காதுகள் இரண்டை வைத்தான்
கேட்பதை ஒருங்கிணைத்தான்
யோசனைகள் பலதை வைத்து
தொத்தரவை தொடரச் செய்தான்
கல்வியை ஏட்டில் வைத்து
கற்பதை மனதில் வைக்க
கடுமையான பயிற்சி தந்த
கல்வியாளனை போற்றுவோமே
அரியதை தெரிந்துக் கொள்ள
அறிந்ததின் வழி நடக்க
அறத்தினைக் கற்றுக் கொடுத்த
அனைவரையும் வாழ்த்துவோமே
எண்திக்கைக் கற்றுக் கொடுத்து
விண்கோள்களின் விவரங்கூறி
விண்கலத்தில் பறந்து சென்ற
விஞ்ஞான வித்தகனை தொழுவோமே
விடாது முயற்சி செய்து
விடைக்கிடைக்கும் வரை முயன்றவாறு
வினைகளைத் தொடர்ந்து செய்தால்
விண் உயர புகழ் கிடைக்கும்.
------- நன்னாடன்