சுதந்திரம் உங்களுக்கும் உண்டு

குழந்தை பருவத்தில்.....


பெண்ணே! நீ பிறந்ததும்
மகாலட்சுமி வருகை! என்றார்கள்

நீ தத்தித்தத்தி நடக்கையில்
தங்க தேர் வருகை! என்றார்கள்

நீ மழலையில் மொழி பேசுகையில்
மகிழ்ச்சியின் உச்சம் என்றார்கள்

வளர்ந்தப் பின்......


கவ்வைக்கு ஆழ்ப்படுத்தி அடிமைப்படுத்த தடைவிதிப்பதோ!
என்ன நியாயம் சொல்?

காழகத்தில் குறைக்கண்டீர் காழகம்
அணிவதில் சுதந்திரம் இல்லையோ!

குரம்பையில் பிறந்தாலும் விண்வெளியை!ஆளப்பிறந்தவர்கள்

சகடம் பிடித்து நடந்து பழகும் சிறுபிள்ளையில்லை வானூர்தியை!
இயக்கி செல்லும் பாவைகள்

ஓர்வின் ஊற்று சிறகடித்து
பறக்கும் பறவைகள்

சிற்றில் கட்டி விளையாடும் பிள்ளை
என்று நினைத்தாயோ!
சிகரத்தை உருவாக்கும் சிற்பிகள்

கங்குல் முடிவுரை பகல்தோன்றும் வரை பாதுக்காக்கும் காவல் நாங்கள்

அசும்பு அல்ல! அசும்புவை
தூய்மை செய்பவர்கள்

நீதி அத்தம் நிலைநாட்ட
பிறந்தவர்கள்

பெண்மை சிறிது உணவென்றாலும்
பகிர்ந்து அயல் உள்ளம் உள்ளவர்கள்

அல்கல் நல்லதையே! நினைத்து
உறவி போன்று உழைத்தாலும்
புகழ்ச்சி விரும்பாத துறவிகளே!
பெண்கள் அனைத்திலும் எங்களுக்கு சுதந்திர உண்டு


துரைராஜ் ஜீவிதா

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (25-Sep-20, 3:05 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
பார்வை : 74

மேலே